Thursday, May 31, 2018

கஞ்சா வியாபரத்தை தட்டி கேட்டதால் சிவகங்கையில் 3 நபர்கள் கொல்லப்பட்டார்களா? - தோழர் ஓவியா

thozhar ? ஓவியா
//சிவகெங்கை பகுதியில் கஞ்சா விற்று வந்த பிற்படுத்தப்பட்ட சாதியைத் சேர்ந்தவர்களை தட்டிக் கேட்டதற்காக தேவேந்திரகுல சாதியைச் சேர்ந்த மக்களை வெட்டியிருக்கிறார்கள் அதில் 3 உயிர்கள் பலியாகி விட்டன என்று செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் எந்த நாளிதழிலும் விரிவான தகவல்கள் இல்லை. எனவே இதனையே நம்பத்தகுந்த செய்தியாகக் கொண்டு சில விசயங்களை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். முதலாவதாக கஞ்சா விற்பதை எதிர்த்து தகராறு செய்தது என்பது  தேவேந்திர குல மக்கள்  என்பது அவர்களின் பெருமைக்குரிய செயலாகும். அது ஒரு உண்மையான சமுதாயப் போராட்டமேயாகும். அதில ஈடுபட்ட பெருமையை முன்னுக்கு நிறுத்தாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததால் கொலை செய்து விட்டார்கள் என்று நம் நண்பர்கள் எழுதுகிறார்கள். இது தவறு என்பதாக நான் உணர்கிறேன். ஒரு பிரச்சனையின் உண்மைத் தன்மைகளை நாம் வெளிக் கொணர வேண்டும். எழுத்து என்பது அற்புதமான செயல்பாடு. அதன் அருமை உணர்ந்து பயனபடுத்த வேண்டும். தயவுசெய்து இப்படி சொன்னதற்காக பொங்காதீர்கள். இரண்டாவது கஞ்சா விற்பவன் அதனை யார் தடுத்தாலும் இதே வன்முறையை கையாளவே செய்வான்.
 அது பொண்டாட்டி பிள்ளையாக இருந்தால் கூட செய்வான். எனவே சாதி இங்கு அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது.
ஆனால் அவனது குணத்தையும் செயலையும் சாதி மட்டும் தீர்மானிக்கவில்லை. அவன் செய்யும் தொழிலம் தீர்மானித்திருக்கிறது. இந்த உண்மையை மொத்தமாக இருட்டடிப்பு செய்து விடுகிறார்கள். சரி. இந்த இரண்டு தவறுகளும் ஏன் நடக்கின்றன என்று பார்த்தால் அவர்களின் அடுத்த குற்றச் சாட்டில் அதற்கு பதில் இருக்கிறது. தமிழன் என்று சொன்னீர்களே என்கிறார்கள். காவிரிப் பிரச்சனையில்… தமிழன் என்று சொன்னீர்களே என்று அவர்கள் பட்டியல் நீள்கிறது.  உங்கள் உண்மையான நோக்கம்தான் என்ன…. ? நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு இனம் நாடு நலியும் போது அதில் அதிகமாகப் பாதிக்கப் படுவது அங்கிருக்கும் விளிம்பு நிலை மக்களாகதான் இருப்பார்கள். ஈழத்தில் முள்வேலிக்குள் மாட்டியது யார்-? காவிரிப் படுகையில் நலிந்து மடிந்து கொண்டிருக்கும் மக்களில் பெரும்பகுதியினர் இந்த மக்களே.  சிவகெங்கையில் சாதிப் பேரைச் சொல்லி தாக்கும் போது சாதியாக பார்க்கிறோம். இந்தியாவில் தமிழர்களாக பாதிக்கப் படும்போது தமிழர் என்கின்ற பேரில் திரள வேண்டும் என்கிறோம். அதற்கு மேல் அந்த தமிழர் என்கின்ற வார்த்தையை வேறெதற்காகவும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியமில்லை. இது புரிந்தால் நல்லது. புரியாவிட்டால் நீங்கள் தமிழர் என்றே சொல்லிக் கொள்ள வேண்டாம். உங்களுக்கு சாதியை ஒழிக்க எந்த வழி தெரியுமோ அந்த வழியில் நீங்கள் வேலை செய்யுங்கள். அநாவசியமாக காவிரிக்காக போராடுகிறவர்களை தன் நிலத்துக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை வம்புக்கிழுக்காதீர்கள். மீண்டும் மீண்டும் சாதியை உருவாக்கியவன் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறான்//
.

Saturday, May 26, 2018

அமித் ஷா - வசுந்தரா: முற்றும் மோதல்!


பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷாவுக்கும், அக்கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் இடையில் நிலவும் கருத்து மோதலால், ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாகத் தலைவர் இல்லாத நிலை நிலவுகிறது.

அண்மையில் ராஜஸ்தானில் நடந்த மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக இருந்த அசோக் பர்னமி தனது பதவியை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ராஜினாமா செய்தார். இவர் முதல்வர் வசுந்தராவின் தீவிர ஆதரவாளர் என்பதால் அகில இந்தியத் தலைமையே இவரிடம் கட்டாய ராஜினாமா கடிதம் பெற்றதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் காலியாக இருக்கும் மாநில பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தனது ஆதரவு வட்டத்தில் இருப்பவரையே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால் அமித் ஷாவோ முதல்வருக்கு இணக்கமான ஒருவரை மாநில பாஜக தலைவராக நியமிக்க உடன்படவில்லை. இந்த கருத்து மோதலால் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி முதல் இன்று மே 28ஆம் தேதிவரை ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.

மத்திய அமைச்சரும் ஜோத்பூர் எம்.பியான கஜேந்திரா ஷேக்வாட்டை பாஜக தலைவராக்க அமித் ஷா விரும்பியபோது அவருக்கு முதல்வர் வசுந்தரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இன்னொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் மெஜ்வால் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட இருந்த நிலையில் அவருக்கும் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நியமனம் செய்யப்படவில்லை.

“மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர் பதவி என்பது தனது ஆதரவாளரிடம் இருக்க முதல்வர் விரும்புகிறார். அப்போதுதான் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில்தான் செல்வாக்கு செலுத்த முடியும் என்று கருதுகிறார் வசுந்தரா. இதற்காகவே அவர் தனது ஆதரவாளரும் இப்போதைய மாநில அமைச்சருமான ஸ்ரீசந்த் கிரிப்லானியை மாநில பாஜக தலைவர் ஆக்குமாறு அகில இந்திய தலைமைக்கு பரிந்துரைத்தார்.

இவரிடம் மாநிலத் தலைவர் பதவி இருந்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு அதிகமாக சீட் வழங்க முடியும் என்று கணக்குப் போடுகிறார் முதல்வர் வசுந்தரா. ஆனால், இதை அமித் ஷா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் ராஜஸ்தான் மாநிலத்துக்கு இன்னமும் மாநிலத் தலைவர் நியமிக்கப்படவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவில் தனிப்பட்ட செல்வாக்குடன் தலைவர்கள் வளர்வதில் அமித் ஷாவுக்கு விருப்பமில்லை. எல்லா லகானும் டெல்லியிடமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். அதன் விளைவுதான் விரைவில் தேர்தலை சந்திக்க இருக்கும் ராஜஸ்தான் போன்ற மாநிலத்துக்கு கூட தலைவர் பதவியை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவர் பதவியை உடனடியாக நியமித்த பாஜக தலைமை ராஜஸ்தான், ஆந்திரா இரு மாநிலங்களிலும் தலைவர்களை நியமிக்க யோசித்து வருகிறது. ஆந்திராவில் பாஜக அவ்வளவு வலிமையாக இல்லை. ஆனால், ஆளுங்கட்சியாக இருக்கும் ராஜஸ்தானில் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் அமித் ஷாவுக்குமான மோதல் முற்றி வருவதால் புதிய தலைவர் யார் என்ற கேள்வி நீடிக்கிறது.

ஊடகங்கள் விற்பனைக்கு! ஊடகங்களின் அதிர்ச்சிகரமான போக்கு குறித்த உண்மைகள் இந்துத்துவப் பிரச்சாரத்திற்குப் பெரும் ஊடக நிறுவனங்கள் ஒப்புதல்... கறுப்புப் பணமாகக் கைக்கூலி பெறச் சம்மதம்... பணம் வாங்கி செய்தி ‘தயார் செய்து’ போடத் தயார்! ஊடகங்களின் இத்தகைய போக்கைக் கையும் களவுமாகப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது கோப்ராபோஸ்ட் ஊடகம்! “இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தல் முடிவை பாஜகவுக்குச் சாதகமா


ஊடகங்களின் இத்தகைய போக்கைக் கையும் களவுமாகப் படம் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கிறது கோப்ராபோஸ்ட் ஊடகம்!

“இந்துத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தேர்தல் முடிவை பாஜகவுக்குச் சாதகமாகத் திருப்பப் பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்வீர்களா?” — தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் நிருபர் கேட்ட இந்தக் கேள்விக்கு இந்திய ஊடகங்களின் பெரும் புள்ளிகள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். கோப்ராபோஸ்ட் நடத்திய இந்த ‘ஸ்டிங்’ ஆபரேஷன் (உண்மைகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கை) பெருஊடக முதலாளிகளின் போக்கைத் தெளிவாகக் காட்டுகிறது.

வகுப்புவாதரீதியில் வாக்காளர்களைப் பிளவுபடுத்தி இந்துத்துவச் செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பேரங்களுக்கு எவ்வாறு ஊடக நிறுவனங்கள் பலவும் தயாராக உள்ளன என கோப்ராபோஸ்ட் செய்தி இணையதளம் சுமார் இரு மாதங்களுக்கு முன்பு ரிப்போர்ட் செய்தது.

இப்போது இந்த இணைய தளம் இரண்டாம் தவணையாக வீடியோ பதிவுகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செய்திகளின் போர்வையில் இந்துத்துவப் பிரச்சாரங்களை (Advertorials) போட்டால் பணம் தருகிறோம் என்று ஆசைகாட்டியதற்கு உடன்பட்டு இந்தியாவின் மிகப்பெரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் நிர்வாகிகளும் உடைமையாளர்களும் தலைகுப்புற விழுந்ததை மாறுவேடத்தில் சென்ற கோப்ராபோஸ்ட் நிருபர் ரகசியமாகப் படம்பிடித்திருக்கிறார்.

உரிய தொகை கொடுத்தால் வகுப்புவாத பேதத்தைத் தூண்டுவது மட்டுமல்ல, தேர்தல் முடிவையே ஒரு கட்சிக்கு ஆதரவாகத் திருப்புவதற்காகப் பணிபுரியத் தயார் என ஊடக நிறுவனங்கள் எவ்வாறு தயாராயின என்பதை இந்த கோப்ராபோஸ்ட் வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.

இந்த பேரத்துக்கு உடன்பட மறுத்தவர்கள் இரண்டே இரண்டு பேர். அவர்கள், வங்காளப் பத்திரிகைகளான வர்த்தமான்,தைனிக் ஜாக்ரண்ஆகியவற்றின் பிரதிநிதிகள்.

டைம்ஸ் குரூப்பின் உடையமையாளரான வினீத் ஜெயின் உள்பட பலர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை ரொக்கமாக, அதாவது கறுப்புப் பணமாக, வாங்கிக்கொள்ளும் விதம் குறித்து விவாதித்தது நிதியமைச்சகத்திலும் வருமான வரி இலாக்காவிலும் அபாய மணி அடித்திருக்க வேண்டும்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை உள்பட பல ஊடகங்கள் டைம்ஸ் குரூப்புக்குச் சொந்தமானவை. கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மிகவும் தேவை என ஆதரித்து இயக்கம் நடத்தியது சேனல் டைம்ஸ் நவ். பணத்தைக் கறுப்புப் பணமாக ரொக்கமாகக் கொடுத்தால் அதை மற்ற பிசினஸ் பேர்வழிகள் வாயிலாக வெள்ளையாக மாற்றிப் பெற்றுக்கொள்கிறேன் என்று இப்போது கூறுகிறார் இதன் உடைமையாளர் ஜெயின்.

எப்படி நடந்தது இந்த ஆபரேஷன்?

புஷ்ப் ஷர்மா என்ற நிருபரை மாறுவேடத்தில் ஆச்சார்யா அடல் என்ற போர்வையில் கோப்ராபோஸ்ட் அனுப்பியது. பெயர் குறிப்பிடப்படாத 'சங்கம்' ஒன்றின் பிரதிநிதி போலத் தன்னைக் காட்டிக்கொண்டு ஊடக உரிமையாளர்களையும் முக்கியப் புள்ளிகளையும் இவர் சந்தித்தார். ஆர்எஸ்எஸ் உறுப்பினராக அல்லது அந்த அமைப்புக்கு மிகவும் வேண்டப்பட்டவராகத் தன்னை இவர் காட்டிக்கொண்டார்.

பணம் பெற்றுக்கொண்டு தங்களது பத்திரிக்கைகள், ரேடியோ நிலையங்கள், தொலைக்காட்சி சேனல்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் இந்துத்துவப் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஊடக நிறுவன நிர்வாகிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘ஆச்சார்யா அடல்’ அவர்களோடு மேற்கொண்ட பேரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகளை கோப்ராபோஸ்ட் இணையதளம் யு டியூப் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பதிவுகள் இந்திய ஊடகங்களின் நேர்மையைப் பரிகசிப்பதாக அமைந்துள்ளன.

விலைபோன டைம்ஸ் குரூப்

கோப்ராபோஸ்ட்டினால் அம்பலப்படுத்தப்பட்டவர்களிலேயே மிகப் பெரும் புள்ளி டைம்ஸ் குரூப்பின் உடைமையாளரும் நிர்வாக இயக்குநருமான விநீத் ஜெயின்.

கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பற்றிய நிகழ்ச்சிகள் / கட்டுரைகள் என்னும் போர்வையில் இந்துத்துவாவுக்கும் அதன் அரசியல் செயல்திட்டத்துக்கும் பரப்புரை செய்வதற்காக ரூ.500 கோடி ரூபாய் தருவதாக ஆச்சார்யா அடல் கூறினார். இது குறித்து அவர் ஜெயினுடனும் டைம்ஸ் குரூப்பின் நிர்வாகத் தலைவர் சஞ்சீவ் ஷாவுடனும் பேரம் பேசியது பல வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.

ரொக்கமாகப் பணம் கொடுத்தால் டைம்ஸ் குரூப்பிற்கு உபயோகம் ஏதும் இல்லை என்று ஜெயினும் ஷாவும் சொல்கிறார்கள். அதே சமயத்தில் ரொக்கத்தை எப்படிச் செலுத்துவது என வழிகாட்டவும் செய்கின்றனர். "பணத்தை சில பெரிய கார்பொரேட் நிறுவனங்களிடம் செலுத்தினால் அவர்கள் அதை சுத்தமாக வெள்ளைப் பணமாக மாற்றிவிடுவார்கள்" என்று சில பெரிய கார்ப்பொரேட் நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டனர் என கோப்ராபோஸ்ட் தெரிவித்தது. "நீங்கள் அவர்களுக்கு ரொக்கமாகப் பணம் செலுத்தினால் அவர்கள் காசோலை வாயிலாக எங்களுக்குச் செலுத்துவார்கள்”, என வினீத் ஜெயின் கூறியது பதிவாகியிருக்கிறது. எந்த இடத்தில் யார் வாங்கிக்கொள்வார், எப்படி அது மாற்றப்படும் என்பதையெல்லாம் அவரது உதவியாளர் ஷா விளக்குகிறார்.

2017ஆம் ஆண்டில் டைம்ஸ் குரூப்பின் மொத்த வருவாயான ரூ. 9976 கோடியில் ரூ. 500 கோடி என்பது 5%க்கும் சற்று அதிகம்.

TheTimes Group- Part 1 of 3

TheTimes Group- Part 2 of 3

TheTimes Group- Part 3 of 3

கல்லி பூரி (இண்டியா டுடே குரூப்)

இண்டியா டுடே குரூப்பின் துணைத் தலைவரான கல்லி பூரியுடன் நடந்த சந்திப்பில் கோப்ராபோஸ்ட் தலைமறைவு நிருபர், இதே திட்டத்தை முன்வைக்கிரார். ராமரும் அயோத்தியும் சர்ச்சைக்குள்ளாகிவிட்டபடியால் கிருஷ்ணரையும் பகவத் கீதையையும் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தைப் பிளவுபடுத்த வேண்டாமென கல்லி பூரி கேட்டுக்கொண்டார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் இது தவிர்க்கப்பட முடியாது என அவர் பதில் கூறினார். கல்லி பூரியின் இந்த ஆட்சேபணையால் பேரம் முறியவில்லை.

இவற்றைப் பயன்படுத்தி அவர்களுடைய "கள நடவடிக்கைகளின்" பகுதியாக பரந்த மக்கள் மத்தியில் இந்துத்துவாவை கொண்டுசெல்ல இண்டியா டுடே க்ரூப் இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனால் ஏற்படும் வகுப்புவாதப் பிளவுக்குத் தன்னைப் பொறுப்பாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். கல்லி பூரி இதற்கு ஒப்புக்கொள்வதாகக் கூறினார். ஆனால் உங்களுடைய நடவடிக்கை ஏதாவது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லையெனில் அதை நாங்கள் விமர்சனம் செய்வோம் என்று மட்டும் கூறினார்.

முன்னதாக கோப்ராபோஸ்ட் நிருபர் இண்டியா டுடே குரூப்பைச் சேர்ந்த டிவி டுடே சேனல் முதன்மை வருவாய் அதிகாரி ராகுல் குமார் ஷாவைச் சந்தித்தார். "நாங்கள் அரசாங்கத்திற்கு மிக மிக ஆதரவாளர்கள். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்" என்று கூறினார் குமார் ஷா. பின்னர் ரூ.275 கோடிக்கு ஒரு விளம்பர நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் திட்டத்தை முன்வைத்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். பெயருக்குத்தான் அது பகவத் கீதையை பரப்புவதற்கான தொகை. இந்துத்துவப் பிரச்சாரமே அதன் உள்ளீடு.

275 கோடி என்பது 2017இல் இண்டியா டுடே ஈட்டிய வருவாயில் 20%க்குச் சமம்.

India Today - Part 1 of 2

India Today – Part 2 of 2

(டைம்ஸ் ஆப் இந்தியா குரூப் முதலாளி வினீத் ஜெயின் மற்றும் இண்டியா டுடே முதலாளி அருண் பூரி மகள் கல்லி பூரி ஆகிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன கதையை இன்று பார்த்தோம். மேலும் 25 முக்கிய ஊடகப் பிரபலங்கள் விலைபோன சிலரின் கதையை நாளை பார்ப்போம்.)

நன்றி: தி வயர்

தமிழில்: பா.சிவராமன்

Friday, May 25, 2018

⭐⭐⭐6 ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச டேப் [TAB] விரைவில் அறிவிப்பு

6ம் வகுப்பில் இருந்து 10 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு டேப் (tab) கொடுப்பது சம்பந்தமாக  மொத்தமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை  60 லட்சம் என கணக்கெடுப்பு முடிந்து தயார் நிலையில் உள்ளது.

6 முதல் 10 ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவசமாக டேப் கொடுப்பது சார்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Tuesday, May 22, 2018

கேரளாவில் மார்பை மறைக்க தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள் பட்டியல்


 அன்றைய திருவாங்கூர் சமாஸ்தானத்தின் ராஜா ஆட்சியில் தோழ் சேலை அணிய தடை விதிக்கப்பட்ட 18 சாதிகள்:
1) குயவர் ( மண்பாண்டம் தொழில் சாதியினர் )
2) சாணார் ( நாடார்) மரம் ஏறும் தொழில் சாதியினர்
3) கருமறவர் மற்றும் செங்கோட்டை மறவர் சாதியினர் ( தேவர் )
4) துலுக்கப்பட்டர் ( மாப்பிள்ளை ) சாதியினர்
5) இடையர் ( கோணர் )
6) நாவீதர் ( முடி திருத்தம்) சாதியினர்
7) வண்னார் ( சலவை தொழில்) சாதியினர்.
8) சக்கிலியர் ( துப்புரவு தொழில்) சாதியினர்
9) பறையர் ( பறையடிக்கும் தொழில்) சாதியினர்
10) நசுரானியர் ( சிரியன் கிறிஸ்தவர்) சாதியினர்
11) குறவர் ( கூடை முடைதல்) சாதியினர்
12) வாணியர் ( வாணிய செட்டியார்) சாதியினர்
13) ஈழவர் , தீயர் ( இல்லத்து பிள்ளைமார் ) மற்றும் அந்த சாதியோடு    தொடர்புடைய மற்றும் போர் தொழில் செய்த தீயர் சாதியினர்
14) பாணர் ( ஆடல், பாடலுடன் கூடிய கலைத் தொழில்) சாதியினர். 
15) புலையர் ( பறையருள் ஒர் உட்சாதி வேட்டைத் தொழில்) சாதியினர்
16) கம்மாளர் ( ஆசாரி) கைவினை தொழில் சாதியினர்
17) கைக்கோளர் ( முதலியார்) சாதியினர்.
18) பரவர் ( முத்தரையர்) சாதியினர்.

துப்பாக்கிச் சூடு அல்ல, மற்றொரு தாமிரபரணி படுகொலை !




மதியம் ஒருவர் பலி என்றார்கள், பிறகு இரண்டு பேர் என்றார்கள்... மாலையோ பத்து பேர் கொலை, பதினைந்து பேர் கொலை என்று நெஞ்சை நெரிக்கும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ‘எங்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்று போராட்டம் நடத்திய பொதுமக்களை, பெண்களை சுட்டுக் கொன்றிருக்கிறது தமிழக அரசின் காவல்துறை.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அறவழியில் போராடி வரும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மே 22) தூத்துக்குடி கலெக்டரிடம் மனு கொடுக்கப் போவதாக மக்கள் ஏற்கனவே அறிவித்தனர்.இதே போன்ற நிலையில்    23/07/199 அன்று மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுக்க சென்றனர்.
அப்போதைய திமுக அரசு நயவஞ்சகமாக தனியார் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக. இருந்து கொண்டு புதிய தமிழகம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள்,தமிழ் மாநில காங்கிரஸ் தொழிலாளர்கள் பேரணியாக சென்றவர்களை தாமிரபரணி ஆற்றில் தள்ளி 17 பேர்களை படுகொலை செய்தார்கள்.அந்த சம்பவம் நடந்து 17 ஆண்டுகள் கழித்து திரும்பவும் நினைவுபுடுத்தும் விதமாக நடந்துள்ள செயல் அதிர்ச்சியளிக்கிறது.


நேற்றிரவு 144
பெரு மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துகொள்ளும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காரணம் தூத்துக்குடி பொதுமக்களோடு மீனவ கிராமங்களில் இருந்து போராட்ட கமிட்டி அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான மீனவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளப் போவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்ததை ஒட்டி கலெக்டரும் எஸ்பியும் ஆலோசித்து நேற்று இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி மக்கள் மனுவைத் தூக்கிக் கொண்டு வரக் கூடாது என்பதுதான் இந்த 144 தடை உத்தரவின் அர்த்தம்.
மேலும் தூத்துக்குடி நகரத்தைச் சுற்றிலும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து மக்கள் நகரத்துக்குள் உள்ளே ஊடுருவிடக் கூடாது என்று முடிவு செய்தனர். எந்தெந்த ஊர்களிலிருந்து மக்கள் போராட்டத்துக்கு வருவார்களோ, அங்கேயேப் போய் மக்களை ஊருக்கு வெளியே வரவிடாமல் தடுக்கப் பார்த்தனர். வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்களை மிரட்டி வாடகைக்குப் போகாமல் இருக்க எச்சரித்தனர்.
இன்று காலை 10.30 மாதா கோவில் வளாகம்...
போலீஸாரின் இத்தனை எச்சரிக்கையையும் மீறி தூத்துக்குடி மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்துக்குப் புறப்பட திரண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் குழுமினர்.
மாதா கோவில் வளாகத்தில் இருந்து மக்களின் போராட்டக் குறிக்கோளான தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. காலை 10.30-க்கு ஸ்டெர்லைட்டை மூடு வேதாந்தா ஓடு... என்ற கோஷத்தோடு மக்கள் புறப்பட அங்கே நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு மக்கள் கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. காரணம் போலீசாரின் எண்ணிக்கையை விட பல மடங்கு கூட்டம் மக்கள் திரண்டனர். அதனால் அப்போது போலீஸாரின் எச்சரிக்கையையும் தடுப்பையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முன்னேறியது.
மாதாகோவில் வளாகத்தில் இருந்து மக்கள் தடையை மீறிப் புறப்பட்டதையும், போலீஸாரின் எண்ணிக்கை அங்கே மிகக் குறைவாக இருப்பதையும் எஸ்.பி அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தினர். உடனடியாக அடுத்த பாயிண்ட்டான விவிடி சிக்னல் அருகே அதிகப்படியான போலீஸார் குவிக்கப்பட்டனர்.
விவிடி சிக்னல் பகல் 11.30
மாதாகோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட மக்கள் கையில் காகித மனுக்களோடு கலெக்டரை பார்க்க நடந்து சென்றனர். மாதாகோவில் வளாகத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது விவிடி சிக்னல். அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் 3 கிலோ மீட்டர் தூரம். எனவே போலீஸாருக்குக் கடுமையான உத்தரவு வந்தது. ‘விவிடி சிக்னலுக்குள்ளேயே அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும், அதையும் தாண்டி முன்னேறவிட்டால் கலெக்டர் அலுவலகத்தைத் தொட்டுவிடுவார்கள். அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குப் போகக் கூடாது’ என்பதே போலீஸாருக்கு வந்த உத்தரவு.
அதன்படி மக்கள் பேரணி விவிடி சிக்னல் அருகே வந்தபோது அங்கே சுமார் ஆயிரம் போலீஸார் திரண்டு நின்றனர். இதற்கு மேல் உங்களை அனுமதிக்க முடியாது, திரும்பிச் சென்றுவிடுங்கள் என்று போலீஸார் எச்சரித்தனர்.
சிக்னலைத் தாண்டிய இளைஞர்கள்...
ஆனால் ஊர்வலத்தில் வந்த பெரும்பான்மையோர் இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் இருக்கும் இளைஞர்கள். எனவே அவர்கள் போலீஸாரின் எச்சரிக்கையை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நாங்கள் கலெக்டரைப் பார்க்கத்தான் போகிறோம் என்று கூறியபடியே போலீஸாரின் தடுப்புகளை எல்லாம் மீறி விவிடி சிக்னலைக் கடந்தனர். இது போலீஸாருக்கு பெரும் தலை குனிவாகிவிட்டது.
புகை மயம்!
சாரை சாரையாக மக்களும் பெண்களும் கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்க வேறு வழியின்றி உடனடியாக தடியடியை ஆரம்பித்தனர். கூட்டம் பின்னோக்கி ஓடும் என்று கணக்குப் போட்டனர் போலீஸார். ஆனால் கூட்டம் கலெக்டர் அலுவலகம் நோக்கி அதாவது முன்னோக்கி ஓடியது. அடுத்தடுத்த நிமிடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. பின் 12 மணியளவில் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது. அந்த இடமே புகைமயமானது.
கொலையான பத்து பேர் விவரம்!
திடீர் திடீர் என்று துப்பாக்கிகள் வெடித்தன. கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வாகனங்கள் பற்றி எரிந்தன. சில மணி நேரத்துக்கு தூத்துக்குடியின் செல் போன் டவர்கள் செயல் இழக்கச் செய்யப்பட்டன.
ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்), கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி), கந்தையா (சிலோன் காலனி - தூத்துக்குடி), வெனிஸ்டா (17 - பெண்) தூத்துக்குடி, தமிழரசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை - தூத்துக்குடி), சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி), அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி), மணிராஜ் (தூத்துக்குடி) ஆகியோரும் மேலும் சில பெண்களும் துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப்படுத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களைக் குறிவைத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தூத்துக்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரேஸ்புரம் மாலை 3.45
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பல்வேறு தலைவர்களும் மதியம் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீஸாரின் ஒரு டீம் தூத்துக்குடியின் மீனவர் பகுதியான திரேஸ்புரத்துக்கு மாலை 3.45 க்கு சென்றிருக்கிறது. அங்கே போராட்டத்தைத் தூண்டியதாக சிலரைத் தேட அதற்கு மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அங்கேயும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள் போலீஸார். இது மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
தூத்துக்குடியே இப்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கை, கால்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள். எனவே துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.
கலெக்டரை சந்திக்க காகிதத்தில் எழுதப்பட்ட மனுவைக் கொண்டு வந்தவர்கள் முன்னால் தமிழக போலீஸார் துப்பாக்கியைத் தூக்கியதால் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

Monday, May 21, 2018

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்


ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 



சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.  ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. 

அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

 

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.  

மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. 

வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும். 

 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். 

 

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.  கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 

அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

தயாரிப்பாளர் மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டு! ‘ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்விக்குப் பெண்களை வேட்டையாடும் களமாக இருந்தது கான் திரைப்பட விழா’ என்று இத்தாலி நடிகை ஆசியா கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாக



பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும், அவர்களுடன் தவறாக நடக்க முயற்சித்தாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இவர் மீது பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துவருகின்றனர்.

திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்து வந்ததாக ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக், உள்பட பல நடிகைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் 71ஆவது கான் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியாவும் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “நான் சில வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். 1997ஆம் ஆண்டு இங்கு வந்திருந்தபோது ஹார்வி வெயின்ஸ்டீனால் நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டேன். அப்போது எனக்கு 21 வயது. இந்தத் திரைப்பட விழா அவரது வேட்டையாடும் களமாக இருந்தது. அவற்றில் சில பழைய கதை வெளியே வரவில்லை. அது பற்றிக் கூறும்போது எனது உடல் நடுங்குகிறது. இதை நான் உரத்துக் கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கான் திரைப்பட விழாவில் #MeToo இயக்கம் தொடங்கிய பின்னர், இது போல் பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் : சிம்பு நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் என நமக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்று நடிகர் சிம்பு பேசியிருக்கிறார்.



நடிகர் விவேக் - தேவயானி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘எழுமின்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விஷால் , சிம்பு, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் வெளியான உரு படத்தின் தயாரிப்பாளரான வி.பி.விஜி எழுமின் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று(மே21) சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு, முதலில் தனது ரசிகர்களுக்குத் தேவையானதைப் பேசி அவர்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதற்குமுன்பாக காலத்தாமதமாக வரும் தனது வழக்கத்தை மாற்றிக்கொள்வதாகவும் உறுதியளித்தார். “4 பேர் கை தட்டினால் போதும் நான் இனிமேல் நல்ல படங்களை கொடுப்பேன். ஆனால், தயவு செய்து ரசிகர்கள் கட்-கவுட் வைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். உயிரை பறிக்கும் கட்-அவுட்கள் எனக்குத் தேவையில்லை” என்று கூறினார்.

அதன்பின் படத்தின் கான்செப்டுக்குள் நுழைந்தவர் “இது குழந்தைகள் சம்மந்தமான படம் என்பதால் இதை சொல்லியே ஆக வேண்டும். செயினை திருடும் ஒரு குழந்தை இருக்கிறது. அந்தக் குழந்தையை தண்டிக்கிறோமே தவிற, ஏன் அவன் அப்படி இருக்கிறான் என்று சிந்திக்காத சமூகத்தில்தான் நாம் இருக்கிறோம். யார் தலைவன்? இன்றைக்கு யார் தலைவன்? நாளைக்கு யார் தலைவன்? இது யார் கொடி? இது என்ன கொள்கை? அது என்ன கொள்கை? எதுவுமே நமக்குத் தெரியவில்லை. நம்ம நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார்கள் என்றே தெரியவில்லை. நம்முடைய தலையெழுத்து நமக்கு எப்படித் தெரியும்” என்று அரசியலுக்குள் நுழைந்தவர் அப்படியே யூடர்ன் அடித்து மீண்டும் நிகழ்ச்சியின் கான்செப்டுக்குள் நுழைந்தார்.

”மகன்களிடம் பெண்கள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தாலே பாலியல் பலாத்காரம் குறையும். நான்தான் நடிகர் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அன்றைய தினம் விவேக் மனசு வைக்கவில்லை என்றால் நடிகர் சந்தானம் இவ்வளவு பெரிய ஆளாக வந்திருக்க முடியாது” என்று கூறினார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய கார்த்தி, “இந்தப் படத்தின் போஸ்டர்ஸ் மற்றும் ட்ரெய்லர் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கல்லூரி மற்றும் பள்ளி விழாக்களுக்குச் சென்று வருகிறேன். எல்லாரும் ஒன்றை மட்டுமே நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள், அது சினிமா. சினிமா பாடல்களைத்தான் பாடுகிறார்கள், சினிமா பாடல்களுக்குத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்குச் சென்றால் கூட எல்லாம் சினிமா மயமாகத்தான் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, தற்காப்புக் கலையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்திருக்கிறார் வி.பி.விஜி. நான் உங்களை மிகவும் பாராட்டுகிறேன். என் மகளை அழைத்துக் கொண்டுபோய் நிச்சயம் இந்தப் படத்தைக் காண்பிப்பேன். எவனாவது ஒருத்தன் செயினைப் பிடுங்கினால், ‘ஐயையோ...’ என்று பயந்து நின்றுவிடக் கூடாது. ‘அடிங்க்... என் செயினையா பறிக்கிற?’ என்று ஒரு குத்து விட வேண்டும். அந்தளவுக்குக் குழந்தைகள் தயாராக வேண்டும். குழந்தைகளிடம் இருந்த இந்த ஃபயரை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. நமக்கு நேரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளிடம் போன், லேப்டாப்பைக் கொடுத்து விடுகிறோம் அல்லது டிவி பார்க்கச் சொல்லி விடுகிறோம். அப்படி இல்லாமல், மேடையில் தங்கள் திறமையை வெளிக்காட்டிய குழந்தைகளைப் பார்த்து எனக்கு ஊக்கமாக இருந்தது” என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால், “நாங்கள் அனைத்து திரைப்படங்களின் நிகழ்ச்சிகளுக்கும் வர முடியாத நிலை உள்ளது. ஏனெனில் எங்களுக்கு பல வேலைகள் இருக்கின்றன. ஒரு சில படங்களை பார்த்து விட்டுதான் நாங்கள் வராமல் இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எங்கள் மீது வைக்கப்படுகிறது. இதுபோன்ற தற்காப்புக் கலை குறித்த படங்களுக்கு நாங்கள் சிறப்பு விருந்தினர்களாக வரக்கூடாது. ஜாக்கிசான் போன்ற தற்காப்பு கலை வல்லுநர்கள்தான் வர வேண்டும்’’ என்றார்.

மேலும் பேசிய விஷால் , பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களை தகர்த்தெரியும் விதமாக எழுமின் திரைப்படம் இருக்கும் என்றும் , நடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த எம்.எல்.ஏ அல்லது சிறந்த மந்திரியாக வருவார் என்றும் கூறினார்.

*💢🔴🔴🔴💢மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்றது- தேர்தல் ஆணையம்*

*மக்கள் நீதி மய்யம் கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு தேர்தல் ஆணையம் ஏற்றக்கொண்டது. கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31-க்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.*

*🅱REAKING NEWS* *💢🛑🛑🛑💢அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!* *800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான

*800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.*

நிறுத்தப்பட்ட குழந்தைத் திருமணங்கள்! ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை (மே 20) திருமணம் நடத்துவதற்குச் சிறந்த நாள் என்பதால் ஏழு திருமணங்களும் அதே நாளில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது குறித்து 


ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரே நாளில் 7 குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (மே 20) திருமணம் நடத்துவதற்குச் சிறந்த நாள் என்பதால் ஏழு திருமணங்களும் அதே நாளில் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சமூக நலத் துறையினர் மற்றும் குழந்தை நலக் குழுவிற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சமூக நலத் துறை அலுவலர் குணசேகரி, உதவியாளர் பாண்டியன், குழந்தை நலக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் உட்பட அதிகாரிகள் திருமணம் நடப்பதாகத் தகவல் வந்த இடத்துக்கு குழுவாகப் பிரிந்து சென்றனர்.

அங்கு,பெற்றோரிடம் குழந்தைத் திருமணம் சட்ட விரோதமானது என்றும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்க மாட்டோம் என ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டனர்.

திருமணம் நடக்கவிருந்த ஏழு பேரில் ஐந்து மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பை முடித்தவர்கள் என்றும், இரண்டு பேர் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்குக் காத்துக்கொண்டிருப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

நடக்கவிருந்த குழந்தைத் திருமணங்கள்

சாத்தான்குளத்தில், 17 வயது மாணவி, கிளியூரைச் சேர்ந்த பாலமுருகன் (30)

பாம்பன் பகுதியில், 17 வயது மாணவி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் (25)

முதுகுளத்துார், பேரையூர் அருகே புல்வாய்குளம் கிராமத்தில் 17 வயது மாணவி, அதே கிராமத்தைச் சேர்ந்த முரளி (25)

கடலாடி தேவர் நகர் பகுதியில் (15) வயது மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (30)

சாயல்குடி குருவாடி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அழகுராஜ் (25).

பார்த்திபனுார் அருகே கீழப்பெருங்கரையைச் சேர்ந்த, 15 வயது மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர்.

கமுதி அருகே சுந்தரராஜபுரம் பகுதியில், 17 வயது மாணவி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி (27).

இவர்களுக்கு நேற்று (மே 20) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பின்பு, போலீசார் உதவியுடன் குழந்தை நலக் குழுவினர் இந்தத் திருமணங்களை தடுத்து நிறுத்தினர்.

கமல், தினகரன் கூட்டணியா?

மக்கள் நலன் காக்கும் வகையில், எதிர்காலத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் இணைந்து செயல்பட்டால் வியப்பில்லை என்று தெரிவித்துள்ளார் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன்.

கடந்த 19ஆம் தேதியன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், ’காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ கூட்டம் நடத்தப்பட்டது. பாமகவின் சார்பாக அன்புமணி ராமதாஸ், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உட்பட பல கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பாக, அதன் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் கலந்துகொண்டார்.

ஆண்டிப்பட்டியில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு ஆண்டிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (மே 21) காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தங்க.தமிழ்செல்வன். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “மக்கள் நீதி மய்யம் சார்பாக, கமல்ஹாசன் நடத்திய விவசாயிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் அமமுக பங்கேற்றது. ஆனால், இந்த கூட்டணி தொடருமா என்று இப்போது சொல்ல முடியாது. எதிர்காலத்தில், மக்கள் நலன் காக்கும், விவசாயிகளைப் பாதுகாக்கும் கூட்டணியில் நாங்கள் ஒன்றாக இணைந்தால் ஆச்சர்யமில்லை” என்று அவர் கூறினார்.

கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசிய தங்க.தமிழ்செல்வன், பாஜகவின் சூழ்ச்சியை முறியடித்து காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார். ”காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தவரை, காவிரியில் தண்ணீர் தரமாட்டோம் என்று பிடிவாதமாகக் கூறிவந்தனர். தற்போது, அங்கு கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஆணையத்தை அமைத்து, தமிழகத்திற்குக் காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய தங்க.தமிழ்செல்வன், அடுத்து வரவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்றுத் தாங்கள் தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Sunday, May 20, 2018

நியாய விலை கிடைக்காத விவசாயிகள்! யிர்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும் என்று


பயிர்களுக்கு நியாயமான விலை வழங்கப்படும் என்று பீகார் அரசு உறுதி அளித்திருந்தபோதிலும் விவசாயிகள் பயிர்களை மலிவு விலையில் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கோதுமையைக் கொள்முதல் செய்ய அரசு சார்பில் சரியான முயற்சிகள் இல்லாததால் விவசாயிகள் தங்கள் பயிர்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்துவருகின்றனர். இந்தியாவில் ராபி சந்தைப்படுத்துதல் பருவம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கும். ஆனால், சந்தைப்படுத்துதல் பருவம் தொடங்குவதற்கு முன்பே குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மார்ச் 15ஆம் தேதி முதலே பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்திலிருந்து 2 லட்சம் டன் கோதுமையைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், கொள்முதல் நடவடிக்கைகளில் மாநில ஏஜன்சிகள் பங்களிக்கவில்லை.

கோதுமையை 100 கிலோவுக்கு 1735 ரூபாய் என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாக பீகார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் மதன் சகினி தெரிவித்துள்ளார். அரசின் கொள்முதல் நடவடிக்கைகள் தாமதமாவதால் கோதுமை விவசாயிகள் 100 கிலோ கோதுமையை 1,400 முதல் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். கோதுமை கொள்முதலை அரசு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதாக சில விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குமாரசாமி அமைச்சரவையில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ? வரும் மே 23ஆம் தேதியன்று குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மகேஷ் இடம்பெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் (மே 19) கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதையடுத்து, மஜத – காங்கிரஸ் அமைச்சரவை பதவியே


நேற்று முன்தினம் (மே 19) கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதையடுத்து, மஜத – காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்பு விழா வரும் 23ஆம் தேதியன்று பெங்களூருவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மஜத சார்பில் 20 பேரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 13 பேரும் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. உத்தேசமான அமைச்சர்கள் பட்டியலும் நேற்று வெளியானது.

இன்று (மே 21) டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியைச் சந்திக்கவுள்ளார் குமாரசாமி. அதன் பிறகே, கர்நாடகாவில் பொறுப்பேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அமைச்சர்கள் பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த கொள்ளேகால் சட்டமன்ற உறுப்பினர் மகேஷின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில், அவருக்குச் சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்த பகுஜன் சமாஜ் கட்சி 20 இடங்களில் போட்டியிட்டது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் மாயாவதி பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 2013ஆம் ஆண்டு கொள்ளேகால் தொகுதியில் தோல்வியுற்ற மகேஷ், இந்த ஆண்டு 31,362 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதற்கடுத்த இடங்களை காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் பெற்றனர்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன; இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி டெபாசிட் பெறவில்லை. மஜத – காங்கிரஸ் அமைச்சரவையில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மகேஷ் இடம்பெறுவது, தேசிய அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்



நமது உடல் கடிகாரத்தை பாதிக்கும் வகையில் இரவில் நாம் சரியாக உறங்காதிருப்பது, மன அழுத்தம் மற்றும் பை போலார் டிஸார்டர் எனும் மனநிலை சீர்கேடு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்பதற்கான நிறைய ஆதாரங்களை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இயற்கையாக உடலில் நடக்கும் இயக்கத்தை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் நாம் தூங்கி வழிவது மட்டுமின்றி உடலில் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும்?

1. மாலைநேர வெளிச்சத்தில் கவனம் தேவை

உங்களால் செல்பேசி, திறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பிரியமுடியாமல் தவிக்கிறீர்களா? நள்ளிரவு தாண்டியும் சமூக வலைதளத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறீர்களா?

இதற்கு உங்கள் விடை ஆம் எனில், உங்கள் தூக்கத்தை நீங்களே பாதித்தவராக இருக்கக்கூடும்.

ஏனெனில், இந்த சாதனங்கள் வலிமையான நீல நிற வெளிச்சத்தை உமிழ்கின்றன. இரவு நேரங்களில் இவற்றை பயன்படுத்தும்போது நமக்கு தூக்கம் வருவதுபோல உணரும் சமயங்களில் நமது உடலுக்குள் வெளியாகும் மெலட்டோனினுக்கு இந்நீல நிற வெளிச்சம் தடைபோடுகிறது.

எப்போது நமது உடலுக்குள் மெலட்டோனின் சுரக்கத் துவங்குகிறதோ, அது நாம் தூங்குவதற்கான நேரம் என்பதற்கான சைகை.

சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மால்கம் வான் ஸ்கான்ட்ச், இரவு நேரங்களில் தூங்கச் செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக நீல நிற ஒளியை உமிழும் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார்.

இல்லையெனில், நீல நிற வெளிச்சத்தை தடை செய்யும் பிரத்யேக கண்ணாடிகள் அணிவது அல்லது இவ்வெளிச்சத்தை குறைக்கும் செயலிகளை பயன்படுத்துவது ஆகியவை உங்களுக்கு உதவக்கூடும்.

நமது தூக்கத்திற்கு எதிரியான டிஜிட்டல் சாதனங்களில் உமிழப்படும் நீல நிற வெளிச்சத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி. மாலை சூரியன் மறைந்த பிறகு வேறு எந்தவித மின்சார வெளிச்சத்தையும் பயன்படுத்துவதையும் குறைப்பது அதிக பலன் தரும்.

படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் மற்றும் திரைச்சீலைகளை முறையாக பயன்படுத்தவது ஆகியவற்றின் மூலம் இதைச் சாதிக்கமுடியும்.

2. தூங்கும் நேரத்தை முறைப்படுத்துங்கள்

வார இறுதிகளில் அதாவது வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் நீண்ட நேரம் இரவில் விழித்திருக்க நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் வாரம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்வதே சிறந்தது.

ஏனெனில் இவை வார இறுதி மற்றும் வார நாட்களில் நமது தூக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகளை களைந்து ஒரே மாதிரியான ஓய்வு நேரத்தை அடைந்து உடலானது புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.

தூங்கும் நேரத்தில் வார இறுதி மற்றும் வார நாட்களில் எவ்வளவு தூரம் மாறுபாடு இருக்கிறதோ அதே அளவுக்கு நமது உடல் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. வளர்சிதை மாற்ற கோளாறு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பை இவை அதிகரிக்கின்றன.

வார இறுதியில் தூங்காமல் படுக்கையில் மட்டும் அதிக நேரம் படுத்திருப்பது உங்களது உடலுக்கு மேலும் தூக்கம் தேவை என்பதற்கான ஓர் அறிகுறி என்கிறார் பேராசிரியர் வான் ஸ்கான்ட்ச்.

3. படுக்கையறையை ஓய்வுக்கான இடமாக்குங்கள்

மடிக்கணினிகள் மற்றும் மொபைல் சாதனங்கள் நமது படுக்கையறையை பொழுதுபோக்குக்கான அறையாக மாற்றிவிட்டன.

உங்களது தூக்கத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் இந்த சாதனங்களை பயன்படுத்துவதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்பேசிகள், மடிக்கணினிகள் மற்றும் கணினி ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.

படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.ஏனெனில் குளிர்ந்த வெப்பநிலையில் நமது உடலுக்கு தூக்கம் கிடைக்க எளிதாக இருக்கும்.

4. 'காலை' சூரிய வெளிச்சம் அவசியம் :-

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை அல்லது சூரிய அஸ்தமனத்துக்கு பிந்தைய வெளிச்சத்தை அதிகளவில் பெறுகிறோம்.

தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணமாக காலை நேரத்தில் திரைசீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதி காலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்காலத்தை கொண்டிருப்பதாக இருந்தால் பருவகால பாதிப்பு குறைபாடு போன்ற உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படக்கூடிய வெளிச்சப் பெட்டிகளை இச்சயமங்களில் பயன்படுத்துவது பலன் தரும்.

5. படுக்கைக்கு செல்வதற்குமுன் செய்யும் வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள்

இது தூங்குவதற்கான நேரம் என உடலை தயார்படுத்தும் விதமாக அதற்கு சைகைகளை தரும்வகையில் சில வேலைகளை செய்வது நல்ல தூக்கம் பெற உதவும் என்கிறார் லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் பென் கார்ட்டர்.

புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் நாம் படுக்கைக்குச் செல்ல தயாராகவும் உதவும்.


''பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளை தூக்கத்துக்கு தயார்படுத்த இவற்றைச் செய்கிறார்கள்'' என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.

'' உணவு ஊட்டுவது, குழந்தைகளை குளிப்பாட்டுவது அதன் பின்னர் படுக்க வைத்து கதை சொல்லி தூங்க வைக்கின்றனர் பெற்றோர்கள். அது சரியான நடைமுறை.

தூக்கத்துக்கு முந்தைய நேரத்தை வழக்கப்படுத்தாமல் இருப்பது உங்களுக்கு தூக்கம் வர உதவாது'' என குறிப்பிடுகிறார் மருத்துவர்.

இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.


6. கஃபைனை தவிருங்கள்

இரவு காபி அருந்தினால் தூக்கம் வருவது தடைபடுவதை நம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.

ஆனால், உங்களுக்கு தெரிந்திருக்காமல் போயிருக்ககூடிய ஒரு விஷயம் என்னவெனில், கஃபைன் சேர்க்கப்பட்ட பானங்களான டீ, கார்பனேட்டட் குளிர்பானங்கள் ஆகியவற்றை மாலை வேளையில் அருந்தியிருந்தால், அவை உங்களுக்கு தூக்கம் வருவதை கடினப்படுத்தலாம்.

ஏனெனில், நமது உடலின் இயக்கத்தில் கஃபைன் தாக்கம் ஐந்து முதல் ஒன்பது மணி நேரம் வரை இருக்கும்.

மது அருந்துவது?

ஆம். இது மற்றொரு முக்கியமான விஷயம்.

ஒன்று அல்லது இரண்டு கோப்பை மது அல்லது பிராந்தி ஆகியவற்றை இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடிப்பதை பலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

மது குடிப்பது தூக்கத்தை மேம்படுத்த எவ்வகையிலும் உதவாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

''ஆல்கஹால் ஒரு விசித்திரமான விளைவை ஏற்படுத்தும். இது நீங்கள் எளிதில் தூக்கத்தில் விழ உதவும். ஆனால் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதிலும், தூக்கத்தின் தரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்'' என்கிறார் பேராசிரியர்கள்

"நான் ஏன் நிர்வாண மாடலானேன்?" - ஒரு தமிழ் பெண்ணின் உருக்கமான கதை


(மராத்தி திரைப்படமான 'Nude', தனலட்சுமி மணிமுதலியார் என்ற பெண்மணியின் கதை. அவர் ஒரு கலைக்கல்லூரிக்கு நிர்வாண மாடலாக பணிபுரிகிறார். இப்படமானது அவரது வாழ்க்கை மற்றும் பணி குறித்த திறந்த விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது கதையை அவரே விளக்குகிறார்.)

எனக்கு 5 வயது இருக்கும்போது சென்னையில் இருந்து மும்பைக்கு வந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். மும்பை மஹாலஷ்மி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நாங்கள் வசித்து வந்தோம்.

என் பெற்றோருக்கு படிப்பறிவு கிடையாது. குப்பை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். சில நேரங்களில் எங்களை தெருக்களில் பிச்சை எடுக்கவும் அனுப்பி வைத்தனர்.

சில நாட்கள் கழித்து, நாங்கள் தாராவி குடிசைப்பகுதிக்கு இடம்பெயர்ந்தோம். ஏழ்மை எங்களை வாட்டியது. அதன் காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை.

பின்பு என் அம்மா, என்னை வீட்டு வேலை செய்ய அனுப்பினார்.

சாதம், பொறித்த மீன் ஆகியவற்றை சமைத்து மும்பையில் கிராண்ட் சாலை பகுதியில் உள்ள நிஷா தியேட்டருக்கு முன் விற்பனை செய்து கொண்டிருந்தோம். சிறு வயதிலிருந்தே திரைப்படங்கள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது.

நான் பார்த்த முதல் படம் ஷோலே.

என் தந்தைக்கு குடிப் பழக்கம் உண்டு. குடித்து விட்டு என் தாயை அடிப்பார். நான் வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்து என்னிடம் அழுது தீர்ப்பார் என் தாய். இதனால், அங்கு என் வேலை போய்விட்டது. பின்னர், நான் இறால் விற்கத் தொடங்கினேன்.

14 வயதில் திருமணம்

என் தாய்க்கு பரிச்சயமானவர் மணி. அவர் அடிக்கடி என் வீட்டிற்கு வருவார். என்னை விட 10-12 வயது மூத்தவர். அவருக்கு என்னை திருமணம் செய்து வைத்த போது எனக்கு 14 வயது .

இந்நிலையில், எனது இரு சகோதரர்களும் வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்தார்கள். தனது குழந்தைகளை விட்டுவிட்டு என் சகோதரி எங்கேயோ சென்று விட்டாள். அதனால், அவர்களின் குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டேன். என் கணவருக்கு அது பிடிக்காமல் என்னை கொடுமை செய்ய ஆரம்பித்தார்.

என்னிடம் இருந்து பணம் வாங்கி, அதை வைத்து மது அருந்துவார்.

என் தந்தை மிகுந்த கொடுமை செய்ததால், அதனை தாங்க முடியாமல் என் தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

என் உடல்தான் தேவைப்பட்டது

என் மூத்த மகனுக்கு 6 வயது இருக்கும் போது, நான் மீண்டும் கர்பமானேன். அப்போது என் கணவர் இறந்துவிட்டார். குழந்தைகளை வளர்க்க வேண்டிய முழு பொறுப்பு என் தலையில் விழுந்தது.

வேலை தேடி அலைந்து கொண்டிருந்த போது, பல ஆண்கள் என்னை தவறான நோக்கத்துடன் பார்த்தனர். எனக்கு வேலைதரத் தயாராக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு என் உடல் தேவைப்பட்டது. நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

'உன் உடல் நன்றா இருக்கிறது'

ஜெ.ஜெ கலைக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த ராஜம்மா என்ற பெண் எனக்கு அறிமுகமானார். எனக்கு அங்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டும், அவர் எனக்கு உதவி செய்யவில்லை. தான் அங்கு துப்புரவு பணி செய்வதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

ஒருநாள் ராஜம்மாவை தேடி, அக்கல்லூரிக்கு நான் சென்றிருந்தேன். அவரை அங்கு கண்டுபிடிக்க முடியாமல், ஒரு வகுப்பறை முன்பு தண்ணீர் அருந்த நின்ற போது, அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க, ராஜம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தன.

உள்ளே சென்ற எனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார் ராஜம்மா.

"நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்று என்னைப் பார்த்து கத்தினார் ராஜம்மா.

நான் வேலை தேடி வந்தேன் என்று கூற, அதற்கு அவர், இப்போது நீ இதை பார்த்து விட்டதால், நீயும் இதனை செய்யலாம். பசியால் இறப்பதை விட இந்த வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்று கூறினார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.

நாங்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டு ஆசிரியர்கள் அறைக்குள் வந்து, நான் இந்த வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். ராஜம்மா நான் செய்வேன் என்று கூறிவிட்டார்.

நான் சற்று யோசித்தேன். ஆனால் ராஜம்மா என்னிடம், "முதலில் இந்த வேலையை செய். பின்பு யோசி. இங்கு நிர்வாணமாக அமர்ந்தால், நாள் ஒன்றுக்கு 60 ரூபாய் கிடைக்கும். ஆடைகளுடன் அமர்ந்தால் 50 ரூபாய். உன் உடல் நன்றாக இருக்கிறது. அதனால், நல்ல பணம் கிடைக்கும்" என்றார்.

அன்றே நான் என் பணியை தொடங்கினேன். ஒரு மாணவர் நான் அமர மேஜையை கொண்டு வந்தார்.

முதன்முதலில் நிர்வாணமான அனுபவம்

முதலில் தயக்கமாக இருந்தது. அழத் தொடங்கி விட்டேன்.

அப்போது, என் மகனுக்கு இரண்டு வயது இருக்கும். என் மார்பகங்கள் பெரிதாக இருந்தன. எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், மாணவர்கள் என்னை சமாதானப்படுத்தினர்.

எப்படியோ என் ஆடைகளை களைந்து மேஜையில் அமர்ந்தேன். என் படத்தை மாணவர்கள் வரைந்து கொண்டிருக்கும் போது, என் மார்பகங்களில் இருந்து பால் வடிய ஆரம்பித்தது. அதனை எப்படி துடைப்பது என்று தெரியாமல் விழித்தேன். என் பிரச்சனையை மாணவர்கள் புரிந்து கொண்டனர்.

என்னை அன்று வீட்டுக்கு திரும்புமாறு கூறிய மாணவர்கள், அடுத்த நாள் வருமாறு சொன்னார்கள்.

60 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை

ஜெ. ஜெ கல்லூரியில் ராஜம்மாவிற்கு நல்ல மதிப்பு இருந்தது. நான் புதிதாக சேர்ந்தேன் என்பதால் எனக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.

போகப் போக மாணவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவர்களின் பணி குறித்து நன்கு அறிந்து கொண்டேன். கடந்த 25 ஆண்டுகளாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன்.

இப்போது, நிர்வாணமாக என்னை ஓவியம் வரைய 1000 ரூபாயும், ஆடைகளுடன் வரைய 400 ரூபாயும் நான் பெறுகிறேன்.

தற்போது, பல கலைஞர்கள் எனக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். என் காலை தொட்டு வணங்குகிறார்கள்.

எனக்கு பல கலைஞர்கள் உதவியும் செய்துள்ளார்கள். தவறான நோக்கத்துடன் என்னை யாரும் பார்ப்பதில்லை. அவ்வப்போது கலைஞர்களின் கண்காட்சிக்கும் நான் செல்வேன்.

Nude திரைப்படத்தின் இயக்குநர் ரவி ஜாதவ் மற்றும் அதில் நடித்த நடிகை கல்யாணி மூலே என்னை பார்க்க வந்தனர். என்னிடம் நிறைய பேசினார்கள். என் வாழ்வின் கதைதான் அந்தத் திரைப்படம். எனக்கு அந்தப் படம் பிடித்திருந்தது. ஆனால், அதன் இறுதிப்பகுதி பிடிக்கவில்லை.

Nude படத்தில் என் கதாப்பாத்திரத்தில் நடித்த கல்யாணி ஜெ.ஜெ. கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது, கல்யாணியை விட, எனக்கு அதிக கைத்தட்டல் கிடைத்தது. அது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம்.

பட

அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. நான் அந்தப்படத்துக்காக அதிக பணம் வாங்கினேன் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அதற்காக நான் பெற்றது ஒரு புடவையும், 20,000 ரூபாய் பணமும்தான். அதுவும் என் கடனை அடைக்க செலவாகிவிட்டது.

'என்னை நினைத்து பெருமைப்படும் என் பிள்ளைகள்'

நான் ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி வந்தேன் என்று என் பிள்ளைகளிடம் கூறியதில்லை. பேராசிரியர்களுக்கு டீ போட்டு கொடுக்கும் பணியும், துப்புரவு பணியும் செய்து வருவதாகத்தான் அவர்களிடம் கூறிவந்தேன். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்குமுன், படத்தின் கதை என்னுடைய வாழ்க்கையை பற்றியதுதான் என்பதை தெரிவித்தேன். முதலில், நான் நகைச்சுவைக்காக கூறுவதாக என் பிள்ளைகள் நினைத்தார்கள். பிறகு என் மீது எரிச்சலைடைந்தார்கள். ஆனால், நல்லபடியாக என்னுடைய சூழலை நான் அவர்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.

இந்த திரைப்படம் குறித்து ஜெ. ஜெ கல்லூரியில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது. அதற்குகூட என்னுடைய குடும்பத்தை நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சியை தொலைக்காட்சியில்தான் என் குடும்பத்தினர் பார்த்தனர். தங்களது தாய் கெளரவிக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள். என்னைப்பற்றி பெருமைப்பட்டார்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நிர்வாண மாடலாக பணியாற்றி நிறைய பணம் சம்பாதித்த பிறகும், எனக்கென்று ஒரு சொந்த வீடு கூட இல்லை. நான் குர்லா பகுதியில் என்னுடைய மகன்களோடு வசித்து வருகிறேன். என்னால் என்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியவில்லை. என்னுடைய மகன்கள் சவாலான பணிகளையே செய்து வருகின்றனர். எப்போதும் பணத்தேவை என்பது இருந்துகொண்டே இருக்கிறது.

தற்போது, ஓவிய பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெண்கள் கழிப்பறை ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். இந்த வேலைக்கு, நாள் ஒன்றுக்கு 200 ரூபாயாக வருமானம் கிடைக்கிறது.

நான் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறேன். நான் ஒரு விதவை. எனக்கு விதவைகளுக்கு தரப்படும் உதவித்தொகையும் கிடையாது. எங்களுக்கென்று எந்தவொரு அரசாங்க திட்டங்களுமில்லை. என்னுடைய உடல் தோற்றத்துடன் இருக்கும்வரை இந்த தொழிலில் இருக்கலாம். அதன்பிறகு நான் என்ன செய்வேன்? இந்த ஒரு கேள்வியே என்னை நிலைகுலைய வைக்கிறது.

ஒரேயொரு ஆண்ட்ராய்ட் ஆப்பை வைத்து பாஜகவை கவிழ்த்த காங்கிரஸ்


பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக தலைவர்கள், காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்களிடம் பேசியதாக வெளியான ஆடியோக்கள்தான் கடைசி நேரத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரஸ் கட்சி ரெக்கார்ட் செய்ய உதவும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை பயன்படுத்தி இருக்கிறது.

கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அவர் புதன்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஆடியோ அரசியல்

நேற்று காலை வரை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் எண்ணத்தில்தான் இருந்திருக்கிறார். ஆனால் 11 மணிக்கு அவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரிடம் பேசியதாக வெளியான ஆடியோதான் மொத்தமாக அவர் மனதை மாற்றியுள்ளது. நேற்று மட்டுமில்லாமல் அதற்கு முதல்நாளும் பாஜகவை சேர்ந்த சோமசேகர ரெட்டி பேசும் ஆடியோ வெளியாகி வைரல் ஆனது.

 


   

முதலில் வந்தது

முதலில் பாஜகவின் ரெட்டி காங்கிரஸ் ,மஜத எம்எல்ஏக்களிடம் பேசும் ஆடியோ வைரல் ஆனது. இவ்வளவு பணம் தருகிறோம், 100 கோடி தருகிறோம் என்று அவர் கூறியது எல்லாம் ஆடியோவில் பதிவானது. காங்கிரஸ் முதல் ஆயுதமாக எடுத்து இதைத்தான். பாஜக குதிரை பேரம் செய்கிறது. இது பெரிய அநீதி என்று குற்றச்சாட்டு வைத்தது. ஆனால் அந்த ஆடியோ பொய்யானது என்று பாஜக மறுத்தது.

   

தொடர்ந்தது

ஆனால் காங்கிரஸ் விடாமல் துரத்தியது. நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு பிரச்சனை போய் கொண்டு இருக்கும் போதே, காங்கிரஸ் அடுத்த ஆடியோவை வெளியிட்டது. இந்த முறை நேரடியாக எடியூரப்பாவை தாக்கியது. எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏவிடம் கொச்சி செல்ல வேண்டாம், எப்படியாவது தப்பித்து வந்துவிடுங்கள் எல்லாம் செய்கிறோம் என்று பேசியது போல அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது. காங்கிரஸ் இந்த ஆடியோவை நேரம் பார்த்து வெளியிட்டு பிரச்சனையை உண்டாக்கியது.

   

பெரிய நெருக்கடி

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சிக்கு கட்டுப்பட்டு போனை சரியாக ரெக்கார்ட் செய்து கட்சியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்கள். அவர்கள் இப்படி வெளியிட்ட ஆடியோக்கள்தான் பெரிய நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுத்தது. எடியூரப்பவே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நாடு முழுக்க அவருக்கு தேசிய அவமானத்தை இந்த திட்டம் தேடிக்கொடுத்துள்ளது.

   

திட்டம்

தற்போது கட்சி வட்டாரங்கள் இது எப்படி நடந்தது என்று தெரிவித்துள்ளது. அதன்படி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்ட உடன் அவர்களின் போன் வாங்கப்பட்டு எல்லோர் மொபைலிலும் தானாக ரெக்கார்ட் செய்யும் ஆண்ட்ராய்ட் ஆப்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் அவர்கள் பேசும் எல்லா காலும் ரெக்கார்ட் செய்யப்பட்டு நான்கு நாட்களாக பேசிய கால்கள் எல்லாம் காங்கிரஸ் உறுப்பினர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதை வைத்தே அவர்கள் ஆடியோ வெளியிட்டுள்ளன

அமெரிக்கா மீது இந்தியா புகார்! ஸ்டீல் பொருள்கள் மீது அமெரிக்க அரசு இறக்குமதி வரி விதித்துள்ளதால், இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா எடுத்துச் சென்றுள்ளது. அமெரிக்காவில் ஸ்டீல் பொருள்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் இந்தியாவில் ஸ்டீ



அமெரிக்காவில் ஸ்டீல் பொருள்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் இந்தியாவில் ஸ்டீல் பொருள்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்றும், இந்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தக விதிமுறைகளுக்கு முரணாக உள்ளதாகவும் உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருள்களுக்கு அமெரிக்க அரசு இறக்குமதி வரி விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது” என்று கூறினார். உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சைத் தீர்வு அமைப்பின் கீழ் அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்த இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே முதற்கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண இயலாவிடில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சைத் தீர்வுக் குழுவிடம் இந்தியா ஒரு கோரிக்கையை முன்வைக்கும். மார்ச் 9ஆம் தேதியன்று ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான இறக்குமதி வரிகளை விதித்தார். இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் எழும் என்றும் அஞ்சப்பட்டது.

கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியப் பொருள்களைத் தவிர மற்ற நாடுகளின் ஸ்டீலுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரியும், அலுமினியத்துக்கு 10 விழுக்காடு இறக்குமதி வரியையும் டொனால்டு ட்ரம்ப் விதித்தார். இறக்குமதி வரியில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்குமாறு இந்திய அரசும் கோரிக்கை வைத்தது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு இந்தியா அனுப்பும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருள்களின் மதிப்பு சுமார் 22.3 பில்லியன் டாலராக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ததை, “மேட்ச் தொடங்கும் முன்பே முடிவடைந்து விட்டது” என்று பாஜகவை விமர்சனம் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.



கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 104 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மதச்சார்பற்ற ஜனதாதளம் – காங்கிரஸ் கட்சிகள் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர், அதனடிப்படையில் 19 ஆம் தேதி 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவிட்டது உச்ச நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா.

கடந்த சில மாதங்களாகவே பாஜகவை விமர்சனம் செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடக தேர்தலில் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியுடன் இணைந்து பாஜகவிற்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரை விமர்சனம் செய்ததற்காக பிரகாஷ்ராஜ் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

முதல்வர் எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று (மே 19) தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநிலம் இனி காவிமயமாகாது. ஆனால், வண்ணமயமாக இருக்கும். மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டதே. 55 மணிநேரம் நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை பாஜக அரசு. நகைச்சுவை ஒருபக்கம் இருந்தாலும், கர்நாடக மக்களே இனிமேல் சேற்றை வாரி இறைக்கும் அரசியலைப் பார்க்கத் தயாராக இருங்கள். நான் தொடர்ந்து மக்களின் பக்கமே இருப்பேன், தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடக அமைச்சரவை: உத்தேச பட்டியல்! பதவியேற்பு விழா நாளை மறுநாள் (மே 21) 12 - 1 மணியளவில் பெங்களூரு கந்தீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார். எனினும் மே 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால், 23ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று குமாரசாமி பின்னர் அறிவித்துள்ளார்.


கர்நாடக முதல்வராக மே 21ஆம் தேதி குமாரசாமி பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவரது பதவியேற்பு தினம் மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கு முன்பாகவே தனது முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து மஜத தலைவர் குமாரசாமியை அழைத்த ஆளுநர் வஜுபாய் வாலா ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார். பதவியேற்பு விழா நாளை மறுநாள் (மே 21) 12 - 1 மணியளவில் பெங்களூரு கந்தீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது” என்று தெரிவித்தார்.

எனினும் மே 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால், 23ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று குமாரசாமி பின்னர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த பதவிகள் ஒதுக்கப்படலாம் என்ற உத்தே பட்டியலையும் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. 

அதன்படி, முதல்வராகப் பதவியேற்கும் குமாரசாமி நிதியமைச்சகத்தையும் தன்னுடன் வைத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

பரமேஸ்வரா(காங்கிரஸ்) – துணை முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சகம்

புட்டராஜு(மஜத) – விவசாயத் துறை

விஸ்வநாத்(மஜத) – கல்வித்துறை

கே.ஜெ. ஜார்ஜ்(காங்கிரஸ்) – பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர்

கிருஷ்ணப்பா(காங்கிரஸ்_- விளையாட்டு

கிருஷ்ண பைரே கௌடா(காங்கிரஸ்) – தகவல் மற்றும் விளம்பரம்

மகேஷ்(மஜத) – சமூக நலத் துறை

ஜி.டி. தேவ்கௌடா(மஜத) – கூட்டுறவுத் துறை

பந்தீப காஷென்பூர்(மஜத) – ஜவுளி மற்றும் அறநிலையத் துறை

டி.சி. தம்மன்னா(மஜத) – தொழிலாளர் துறை

தினேஷ் குண்டு ராவ்(காங்கிரஸ்) –சுங்கத்துறை

மருத்துவர் சுதாகர்(காங்கிரஸ்) –சுகாதாரத்துறை

தன்வீர் சைத்(காங்கிரஸ்)- உயர்கல்வித் துறை

ரோஷன் பைக்(காங்கிரஸ்) – வனத் துறை

எம்.டி. பாட்டீல்(காங்கிரஸ்) – உணவு மற்றும் குடிமை பொருட்கள் வழங்கல்

ஆர்.வி.தேஸ்பண்டே(மஜத) – சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரங்கள்

சதீஷ் ஜர்கிஹோலி(காங்கிரஸ்) – சர்க்கரை மற்றும் சிறு நிறுவனங்கள்

அஜய்(காங்கிரஸ்) – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

சிவசங்கரப்பா(காங்கிரஸ்) – வருவாய்

ராமலிங்க ரெட்டி(காங்கிரஸ்)- போக்குவரத்து

ராமசுவாமி(மஜத) – தொழில்துறை

ஆர்.நரேந்திர(காங்கிரஸ்) – கால்நடை பராமரிப்பு

காதிர்(காங்கிரஸ்) – சுகாதாரம்.

சோனியாவைச் சந்திக்கிறார் குமாரசாமி பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தவறென்று, மே 16ஆம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி. ஆளுநரின் முடிவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவசர வழக்கு தொடுத்ததாலேயே, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த காரணங்களால், இந்த ஒரு வார காலத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சித்தலைவர்களுக்கு, நாளை குமாரசாமி நன்றி தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மஜத - காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, திமுக செயல்தலைவர் 


நாளை டெல்லி சென்று காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தியைச் சந்திக்கவிருக்கிறார் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவர் குமாரசாமி.

கடந்த 17ஆம் தேதியன்று கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பாவுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா. இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து, மே 19ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். நேற்று (மே 19) கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் எடியூரப்பா. இதனைத் தொடர்ந்து மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்க, ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் விருப்பம் தெரிவித்தார் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி. வரும் 23ஆம் தேதியன்று, இவர் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார்கள் என மஜத சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று, இந்த விழாவில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார் குமாரசாமி. நாளை (மே 21) டெல்லி சென்று ராகுல் மற்றும் சோனியாவைச் சந்திக்கவிருப்பதாகவும், முறைப்படி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்போவதாகவும், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மே 15ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என்று அறிவித்தார் காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். குமாரசாமி முதலமைச்சராகத் தாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளித்தார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் ஒரு வார காலமாக, கர்நாடகாவில் முகாமிட்டுள்ளார். நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போதும், அவர் சட்டமன்ற பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தார்.

பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தவறென்று, மே 16ஆம் தேதி நள்ளிரவில் உச்ச நீதிமன்றத்தை நாடினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி. ஆளுநரின் முடிவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவசர வழக்கு தொடுத்ததாலேயே, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த காரணங்களால், இந்த ஒரு வார காலத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சித்தலைவர்களுக்கு, நாளை குமாரசாமி நன்றி தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மஜத - காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மஜத தலைவர் ஹெச்.டி.தேவகவுடா அழைப்புவிடுத்துள்ளார்.

முன்னதாக, 1996ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த தேவகவுடா பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது, அந்த அணியில் திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், தேசிய மாநாட்டுக்கட்சி, சமாஜ்வாதி உள்ளிட்ட 13 கட்சிகள் அங்கம் வகித்தன. அப்போது, காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து இந்த முன்னணிக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, மீண்டும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியிடையே தற்போது கூட்டணி உருவாகியுள்ளது.

Sc பட்டியலில் தேவேந்திரகுல வேளாளர்களை சேர்க்க கூடாது என 1927 ல் திரு .சீனிவாச பிள்ளை எழுதிய கடிதம் .